High Court | Madurai | விருதுநகரை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கு.. அசாம் கொடூரனுக்கு வாழ்நாள் சிறை..

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய வாழ்நாள் கடுங்காவல் சிறை தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதிசெய்தது. கடந்த 2020ஆம் ஆண்டு, சிவகாசியில் 8 வயது சிறுமியை அசாம் மாநில கூலி தொழிலாளியான மொசாம் அலி என்பவர், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம், மொசாம் அலிக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனையை வழங்கியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வும், இதே தண்டனையை உறுதி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்