சாத்தான்குளத்தில் `அசன பண்டிகை’ - சாதி மத பேதமின்றி மக்கள் பங்கேற்பு

x

சாத்தான்குளம் அருகே தூய கிறித்துவ ஆலயத்தின் 40வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகையை ஒட்டி, டன் கணக்கில் சமையல் செய்யப்பட்டு அன்னதானம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் தூய கிறித்துவ ஆலயத்தில் நடந்த இந்த 40வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழாவில், மூன்றரை டன் அரிசி, ஒரு டன் பருப்பு, 2 டன் காய்கறிகள் என டன் கணக்கில் ஊரே கம கமக்க சமையல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, "மண மணக்கும் அவியல் மற்றும் சாம்பாருடன்" கிறித்துவ ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சாதி மத பேதமின்றி அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்