இரணியம்மன் கோயிலில் மேளம் அடித்ததும் உள்ளே இருந்து வந்த மலைப்பாம்பு

x

சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் உள்ள பிரசித்தி பெற்ற இரணியம்மன் கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதில் நடிகர் கிங் காங் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பொதுமக்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கோயிலில் வாத்தியங்கள் முழங்கியபோது, கோயில் மேற்கூரையில் மலைப்பாம்பு வந்ததை பார்த்த பக்தர்கள், பரவசத்துடன் வணங்கினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கிங்காங், தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது, இரணியம்மனை வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், அதனால் தனக்கு வெற்றி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்