அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் நகை கொள்ளை

அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த பெத்துராஜ் என்பவருக்கு அடுத்தடுத்து 2 வீடுகள் உள்ளன.
அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் நகை கொள்ளை
Published on

அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த பெத்துராஜ் என்பவருக்கு அடுத்தடுத்து 2 வீடுகள் உள்ளன. நேற்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக ஒரு வீட்டில் தூங்கியுள்ளனர். அந்த சமயத்தில் மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 42 சவரனை கொள்ளை சென்றுள்ளனர். அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com