Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய ரவுடி கைது.. சென்னையில் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரவுடி சம்போ தினேஷ் கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ் என்றழைக்கப்படும் சம்போ தினேஷ் மீது, 3 கொலை வழக்குகள் உட்பட 42-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை சோதனைகளை தவிர்க்க முன்கூட்டியே அதிகளவில் கஞ்சா வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் உறுதியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட தினேஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com