அதிமுக திமுக இடையே வாக்குவாதம் .. தர்மபுரியில் உச்சகட்ட பரபரப்பு | DMK | ADMK | Thanthitv

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே வாரசந்தை நடந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைப்பது தொடர்பாக, அதிமுக- திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசந்தையூரில் 25 லட்ச ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்க அந்த பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த இடத்தை வருவாய் அலுவலர் ஆய்வு செய்ய வந்தபோது, திமுகவினருக்கும், ஒப்பந்தம் எடுத்த அதிமுக பிரமுகர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கண்டிப்பாக பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்து விட்டு, வருவாய் அலுவலர் புறப்பட்டபோது, அந்த பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com