Archaeology தொல்பொருள் பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் அற்புத கண்காட்சி..வியக்கும் மக்கள்
என்னதான் இந்த விஞ்ஞான உலகத்துல புதுசு புதுசா நிறைய கண்டுபிடிப்புகள் வந்தாலும்...வரலாற்றுல வாழ்ந்து மறைஞ்ச மனிதர்களா இருக்கட்டும்...அவுங்க கட்டுமானங்கள்...அப்ப இருந்த விலங்கினங்கள்...மக்களோட பழக்க வழக்கங்கள்...அவுங்க கடைபிடிச்ச பாரம்பரியம்...உணவு முறைகள்...இதையெல்லா கண்டுபிடிக்குறதுல தான் கிக்கே இருக்கு...
அப்படிப்பட்ட வரலாற்று பிரியர்களுக்காகவே பெருல ஒரு கண்காட்சி திறக்கப்பட்டுருக்கு...
தென்னமெரிக்க நாடான பெருவோட மறைக்கப்பட்ட தொல்பொருளோ பொக்கிஷங்கள காட்சிப்படுத்துற ஒரு அற்புதமான கண்காட்சி...
நாம தொல்பொருள் அதிசயங்கள பாக்க அந்தந்த இடங்களுக்கு போகணும்னு அவசியமில்ல...
விஆர் ஹெட்செட் மூலமா எல்லா அகழ்வாராய்ச்சி இடங்களையும் நீங்க கண்கூடா பார்க்க முடியும்...
அலைச்சல் இல்ல...அதே சமயம் தொல்பொருள் தளங்கள ஒரே இடத்துல நின்னு ரசிக்கலாம்...
Chachapoya கலாச்சாரத்தோட Gran Pajaten தொல்பொருள் தளத்த ஆராய்ச்சி பண்ணலாம்...ரொம்ப தொலைவுல இருக்க அந்த இடத்துக்கு போய் நீங்க பாக்குறதுங்கிறது கஷ்டம்...சுற்றுலா பயணிகளுக்கு இத எளிதாக்கி தருது இந்த கண்காட்சி...
வடக்கு பெருல அமைஞ்சுருக்க அமேசான் பகுதில கிபி 800ல இருந்து 1500 வரைக்கும் இந்த Chachapoya கலாச்சாரம் இருந்தது...மலை சிகரங்கள்ல சின்ன சின்ன வீடு கட்டி மக்கள் வசிச்சிருக்காங்க..அப்றம் கோட்டைகளும் கூட இருந்துருக்கு...ஸ்பானியர்கள் வருகைக்கு முன்னாடி இது இன்கா பேரரசால கைப்பற்றப்பட்டுச்சு...
2023-2024ல World Monuments Fund-ஆல கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பொருட்களும் இங்க காட்சிப்படுத்தப் பட்டுருக்கு...
முக்கியமா இங்க Chachapoya கலாச்சாரத்த சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்டட அமைப்புகள கண்டுபிடிச்சாங்க...முன்னாடி வெறும் 26 மட்டும் தான் கண்டுபிடிச்சுருந்தாங்க...
இந்த கண்காட்சி வர்ற ஜூன் 18 வரைக்கும் லிமா கலை அருங்காட்சியகத்துல நடக்கும்...பொதுமக்களுக்கு இலவச அனுமதி...மக்கள் வரலாற்ற பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இந்த கண்காட்சில கலந்துக்கிறாங்க...
