Coonoor | Landslide | குன்னூரில் மீண்டும் மண்சரிவு - கோர தாண்டவம் ஆடும் இயற்கை
குன்னூரில் மீண்டும் மண்சரிவு - கோர தாண்டவம் ஆடும் இயற்கை
Coonoor | Landslide | குன்னூரில் மீண்டும் மண்சரிவு - கோர தாண்டவம் ஆடும் இயற்கை
#Coonoor #landslide #thanthitv
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சாலையில் 90 சதவீத சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு கே.எம்.எஸ். அருகே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களை அகற்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
