``பாகுபாடு கூடாது'' - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமகவுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், ஆளுநரைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தை அனுமதித்ததாக குற்றம் சாட்டி பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் நீடிப்பார்கள் எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல... காவல்துறையினர் பாரபட்சம் காட்டக்கூடாது... எதிர்காலத்தில் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதி, பா.ம.க. மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
