நடுரோட்டில் அமர வைக்கப்பட்ட மூதாட்டி | செய்வதறியாது தவித்த காட்சி

x

மூதாட்டியை சாலை நடுவே அமரவைத்த மகனால் பரபரப்பு

தேனியில் நெடுஞ்சாலை நடுவே தாயை அமர வைத்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தினமும் மக்களிடம் யாசகம் பெற்று வந்துள்ளார் மூதாட்டி. மருத்துவமனை வளாகத்தில் கட்டிலில் அமர்ந்திருந்த தனது தாயை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேந்திரன் வலுக்கட்டாயமாக கட்டிலோடு இழுத்து வந்து, நெடுஞ்சாலையின் நடுவே அமர வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டு சாலையோரம் அமர வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்