மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பைபாஸ் சாலையில் நடைபயிற்சிக்கு சென்ற சரவணனை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்மநபர்களை தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com