Ameer | MGR | Annadurai | Vijay TVK | விஜய்யை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்ட அமீர்?

x

எம்ஜிஆர் போல மற்றொரு போர்வாள் வந்துள்ளதாகவும் அதை, யார் கையில் எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் இயக்குநரும், சமூக செயற் பாட்டாளருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு அமீர் பதிலளிக்கையில், எம்ஜிஆர் என்ற போர்வாளை அண்ணா முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டதாகவும், தற்போது உருவாகியுள்ள புதிய போர்வாளை யார் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே முடிவு அமையும் என்றும் தெரிவித்தார். நீங்கள் குறிப்பிடும் போர்வாள் விஜய் தானா என்று கேட்ட போது, சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்