கூட்டணி, வெற்றி வாய்ப்பு - அமித்ஷா முக்கிய ஆலோசனை

x

கருத்து வேறுபாடுகளை மறந்து என்.டி.ஏ கூட்டணி வெற்றிக்கு பாடுபடுமாறு தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார். இதில், கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினருடன் இணைந்து என்.டி.ஏ வெற்றிக்கு பாடுபடுமாறு அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டணி நிலவரம் வெற்றி வாய்ப்பு தொடர்பாக அமித்ஷா கேட்டறிந்ததாக பேசப்படுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்