கோவையில் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடியதை பார்த்து பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். விளாங்குறிச்சி மாகாளியம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. அருண்குமார், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இன்னிசை குழுவின் பாடலுக்கு ஏற்ப அவர்கள் நடனமாடியது, அங்கிருந்தவர்களை கவர்ந்தது..
Next Story
