Madurai | Murder | உயிரைப்பறித்த மைக் செட் பிரச்சனை - அதிமுக நிர்வாகி கத்தியால் குத்திக்கொ*ல
ஒலிபெருக்கி வைத்ததில் தகராறு- அதிமுக நிர்வாகி குத்திக்கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொங்கல் விழாவில் ஒலிபெருக்கி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில், அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூத்தியார்குண்டு பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு அதிமுக மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் பிச்சை ராஜன், தனது ஒலிபெருக்கி அமைப்பை பணம் வாங்காமல் கொடுத்துள்ளார். வழக்கமாக பாலமுருகன் என்பவர் இந்த விழாவுக்கு ஒலிபெருக்கி அமைத்துவந்த நிலையில், தனது இடத்தை பிச்சை ராஜன் பிடித்ததால் ஆத்திரமடைந்த அவர், பிச்சை ராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
