TRFக்காக வக்காலத்து... பதற்றத்தில் ஐநாவுக்கு ஓடி... அம்பலமான பாக்.,
ஐ.நா. பாதுகாப்பு சபை செய்திக்குறிப்பில் இருந்து “தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்“ The Resistance Front என்ற தீவிரவாத அமைப்பின் பெயரை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலுக்கு காரணமாக TRF என்ற அமைப்பும் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், TRF அமைப்பின் பெயரை அந்த அறிக்கையில் இருந்து நீக்க வேண்டுமென பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடுகிறதா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
Next Story
