புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பு அலைகள் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கமலின் ஆதரவு கல்வி துறையில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளித்திருப்பதாக கூறும் நடிகர் சூர்யா, கமலுக்கு மக்கள் நீதி மய்யத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.