

காலாண்டு விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பெய்த சாரல் மழையில் நனைந்தபடி, இயற்கை எழில் கொஞ்சும் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். தங்கும் இடங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில், தங்க இடம் கிடைக்காமல் சில சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.