"ஒரு வருச உழைப்பு நாசமா போச்சு அய்யா"... பார்த்து பார்த்து கதறிய கூலி தொழிலாளி
சிவகங்கை மாவட்டம் கிளாதரி பகுதியில், கூலி தொழிலாளி சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கரையான் அரித்ததால் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். முத்துக்கருப்பு என்ற பெண் தனது கணவருடன் தினமும் கூலி வேலைக்கு சென்று ஆடு, மாடுகள் வளர்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாய் தாள்களாக மாற்றி தகர உண்டியலில் சேமித்து வந்துள்ளார். கூரை வீட்டில் வசிப்பதால், வீட்டினுள் குழி தோண்டி தகர உண்டியலை புதைத்து வைத்துள்ளார். மகள் காதணி விழாவிற்காக இந்த பணத்தை அவர் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக தகரத்தை கரையான் அரித்து உள்ளே இருந்த ஒரு லட்சம் ரூபாயையும் அரித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்..
Next Story
