ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.. காரைக்காலில் பரபரப்பு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து, ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனி பகவானுக்கு உரிய ஸ்தலங்களில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இந்தநிலையில், தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள், அதில் ஆபாச உள்ளடக்கங்களை பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வாரத்தில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேஸ்புக் பக்கம், காரைக்கால் பத்திரப்பதிவுத்துறையின் கைரேகை மென்பொருள், தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பேஸ்புக் பக்கம் உள்ளிட்டவை, ஹேக் செய்யப்பட்டும், முடக்கப்பட்டும் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com