ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை வைத்து கொண்டு ஊரையே அலறவிட்ட மர்ம நபர்

x

23 சவரன் நகை திருட்டு - தடயங்களை அழிக்க மிளகாய்ப்பொடி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முதியவரை தாக்கிவிட்டு, 23 சவரன் தங்க நகை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடியாலம் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி. இவர் தனது தம்பி ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் சிலர் வீட்டினுள் புகுந்தனர். அறையில் இருந்து பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு பதறி எழுந்த ராமலிங்கம், மர்மநபர்களை தடுக்க முயற்சித்துள்ளார். உடனடியாக அவரின் முகத்தில் துணியால் அழுத்தி தாக்கி அவரை மயக்கம் அடையச் செய்துள்ளனர். பின்னர் கட்டிலின் அடியில் வைக்கப்பட்டிருந்த 23 சவரன் தங்க நகையை திருடிக் கொண்டு, தடயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்