kanchipuram | Death | தெர்மாகோல் படகு பயணத்தில் நேர்ந்த சோகம்.. சேற்றில் சிக்கி உறைந்த பரிதாபம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தெர்மாகோல் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நபர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது நண்பர்களான ரஜினி, மற்றும் மாரிமுத்துவுடன் சேர்ந்து, படப்பை குத்தனூர் ஏரியில் தெர்மோல் படகில் அமர்ந்து மீன்பிடித்த போது, கழுத்தளவு நீரில் மூழ்கி மாயமானார். உடனிருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்து, இயலாத நிலையில், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின், சங்கரின் உடல் மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்