Dindigul | வியாபாரியை மண்வெட்டியால் கொடூரமாய் அடித்த நபர்.. அலறி கத்திய பதறவைக்கும் CCTV
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில், சாலையோர வியாபாரியை ஒருவர் மண்வெட்டியால் தாக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காய்கறி கடையில் வேலை பார்த்து வரும் பால்ராஜ் என்பவரை, அந்த வழியாக வந்த ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மண்வெட்டியால் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த பால்ராஜை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
