பரபர சூழலில் வெளியுறவு துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்

x

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவ மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி வரும் சில பிரச்சனைகள் குறித்தும், அதனை தடுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்

இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதைத் தடுக்கவும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

-------


Next Story

மேலும் செய்திகள்