சேற்றிலும் சகதியிலும் விழுந்து எழும் தேர் - திருவாரூரில் வினோத திருவிழா

x

திருவாரூர் மாவட்டம் அருகே பிடாரி குளுந்தாளம்மன் கோயிலில், விளை நிலத்தில் தோலில் சுமந்து செல்லப்படும் வினோத தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தப்ளாம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள பிடாரி குளுந்தாளம்மன் கோயில் விழா, கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குளுந்தாளம்மன் கோயில் தேர் தோள்களில் சுமந்து செல்லப்பட்டு, சேறும், சகதியும் நிரம்பிய விளை நிலங்களில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது தேர் விழுந்த இடத்தில், மக்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். வினோத தேர் திருவிழாவை கண்டு ரசிக்க சுற்றுபுரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்