கோயில் அருகே சுத்தம் செய்த போது கிடைத்த 700 ஆண்டு கால `பொக்கிஷம்'
700 ஆண்டுகள் பழமையான ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டையில் 700 ஆண்டுகள் பழமையான 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் அருகேயுள்ள கூகூர் கிராமத்தின் மேட்டுப் பகுதியை ஓராண்டுக்கு முன் உள்ளூர் மக்கள் சுத்தம் செய்த போது, லிங்க சிற்பமும், நந்தியும் கிடைத்தது. இதனையடுத்து தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர், ஆ.மணிகண்டன் ஆய்வு செய்த போது, பண்டைய நிர்வாக உரிமையை வெளிப்படுத்தும் 2 ஆசிரியம் கல்வெட்டுகளும், ஒரு துண்டு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று 13 ம் நூற்றாண்டையும், மற்றொன்று 14 ம் நூற்றாண்டையும், 3-வது துண்டு கல்வெட்டு 15 ம் நூற்றாண்டின் பிந்தைய காலத்தையும் சேர்ந்தது என தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் கூறியுள்ளார். மேலும் இந்த கல்வெட்டுகளைப் பார்க்கும் போது குன்றாண்டார் கோவில் குன்றுகளை அடிப்படையாக வைத்து நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது எனவும் கூறியுள்ளார்.
