Child in Panaiyur | பனையூருக்கே வந்த 5 வயது குழந்தை.. விடை புரியாமல் நடக்கும் விசாரணை..
சென்னை அக்கறை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தை திடீரென
காணாமல் போன நிலையில், குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்டு காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். குழந்தை காணாமல் போனது குறித்து, செல்வம் - பிரியா தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஸ்பீக்கர் மூலம் குழந்தை காணாமல் போனது குறித்து போலீசார் அறிவித்தனர். அப்போது 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையூர் கடற்கரையில் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குழந்தை அங்கு சென்றது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
