40 ஆடுகளை கடித்த தெருநாய்கள் - 25 ஆடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே 40க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில், 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தேவிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் சுமார் 45க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகளை, நான்கு தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துள்ளன. இதில், 25 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 15 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இறந்த ஆடுகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பதால், நிவாரணம் வழங்க வேண்டும் என உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
