பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன்-உடனே டிரைவர் செய்த அதிர்ச்சி செயல்

x

புதுக்கோட்டையில் சாலையில் சென்ற தனியார் பள்ளி வாகனத்திலிருந்து, 4 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகனம் கதவு திறந்தவாறு இயக்கப்பட்ட நிலையில், ஸ்ரீ கைலாஷ்நாத் என்ற சிறுவன் வேனில் இருந்து தவறி விழுந்துள்ளார். வேனை பின்தொடர்ந்து வந்த சிலர் காயம் அடைந்த சிறுவனை மீட்டதுடன், பள்ளி வானத்தை விரட்டிச் சென்று ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓட்டுனர் வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். மேலும் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்