நகை வாங்குவது போல் நடித்து 3 சவரன் நகை திருட்டு.. கேடி லேடியின் பக்கா பிளான்

x

Thiruttani Theft | நகை வாங்குவது போல் நடித்து 3 சவரன் நகை திருட்டு.. கேடி லேடியின் பக்கா பிளான் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நகை வாங்குவது போல் நடித்து 3 சவரன் நகையை திருடி சிசிடிவி-யில் சிக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி பேருந்து நிலையம் அருகே ம.பொ.சி சாலையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குச் சென்ற பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 3 சவரன் நகையை மறைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த பிரியங்கா என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகைத்திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்