சென்னையில் மின்னல் வேகத்தில் மோதி 3 பேருக்கு மரண பயத்தை காட்டிய சிறுவன் - வெளியான சிசிடிவி

x

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த ஷாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் நடந்து சென்ற முதியவர் உள்ளிட்ட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்