தருமபுரி : ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி : ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
Published on
பென்னாகரத்தை அடுத்த சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி, தனது மருமகன் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, தனது மகளை கொடுமைப்படுத்துவதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். அதேபோல் அடிலம் கிராமத்தை சேர்ந்த காளியம்மாளின் மகள் ராசாத்தியின் கணவர் கொடுமைப்படுவதாக கூறி இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பற்றி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com