"24 மணி நேர மதுபானக்கடை - கண்டு கொள்ளாத காவல்துறை.." - மதுபாட்டில்களை உடைத்த பெண்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபாட்டில்களை பெண்களே பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனர். கோம்பைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், சாக்கு பையில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்