india | tngovt | தமிழகத்தில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேறியதாக தகவல்
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுத்து வெளியேற்றும் பணிகளில் குடியுரிமை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேறி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியாக சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்கியிருந்தவர்களும் வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
