கோயிலில் துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள் - 20 பக்தர்களின் நிலை?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காம்பட்டு கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த புளிய மரத்தில் உள்ள மலை தேனீக்கள் கிராம மக்களை கொட்டியதாக தெரிகிறது. இதில் வலி தாங்க முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தேனீ கூட்டை தீயணைப்புத் துறையினர் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்
Next Story
