Girl | வீட்டின் கேட்டில் ஏறி விளையாடிய 2 சிறுமிகள் கொடூரமாக பலி - தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் ஏறி 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த சுவர் கேட்டுடன் இடிந்து விழுந்துள்ளது.
இதில் இடிபாடுகளில் சிக்கி, ராஜாமணியின் 9 வயது மகள் கமலிகா மற்றும் அவரது உறவினர் மகள் ரிஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டின் சுவர் கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சுவர் இடிந்து 2 சிறுமிகளை பலிகொண்டுள்ளது.
வீட்டின் சுவர் இடிந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story
