யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது
Published on
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பரபெட்டா காப்புக்காடு பகுதியில் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த வனத்துறையினர், மலைப்பகுதி காந்திநகரைச் சேர்ந்த வீரன் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். மேலும் செம்மண்குட்டை அருகே மறைத்து வைத்திருந்த யானை தந்தங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com