திருவிழாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 பேர் கைது

x

திண்டுக்கல்லில் திருவிழாவிற்கு சென்ற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளைமலை வீருமாறம்மன் கோவில் திருவிழாவில், பெண்கள் குளியலறை அருகே சிலர் வீடியோ எடுப்பதாக, திருவிழாவிற்கு சென்ற பெண்கள் புகார் அளித்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பக்தர்கள் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் வீடியோ எடுத்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பக்தர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே செம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த வண்ணப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் மற்றும் ஒரு பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஹரி மற்றும் விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்