18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் 18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அரசு உத்தரவின்படி வினாடிக்கு 279 கனஅடி வீதம், 9 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக எம்.பி பாஸ்கரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com