மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | 4 PM Headlines | Thanthi TV
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனிக்குழு அமைப்பு...
கிட்னி விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்து விசாரணை...
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்...
திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குனர் உத்தரவு..
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய காவலர்...
காவலர் பூபாலன் மற்றும் இன்ஸ்பெக்டராக உள்ள மாமனார் உட்பட குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு...
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கில், தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு...
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை...
மனைவியின் வாயைப்பொத்தி அடித்ததாக, தனது தங்கையிடம் கூறிய காவலர் பூபாலன்...
மதுரை ஆசிரியை வரதட்சணை வழக்கில் வெளியான பரபரப்பு ஆடியோ...
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஆசிரியர் கண்டித்ததால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்..
மாணவன் தற்கொலையை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார்...
பாஜக அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக குரல் எழுப்புவோம்...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...
சோதனையின் போது மயங்கி விழுந்த முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி...
தனியார் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர லஞ்சம் பெற்றதாக புகார்...
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு காவல்துறை...
