இயற்கை உபாதை கழிக்க சென்ற 18 வயது இளம்பெண்..ஃபாலோ பண்ணிய வடக்கு இளைஞர் செய்த அசிங்கம்..
திருத்தணி அருகே 18 வயது இளம் பெண்ணை, முட்புதருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அசாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 6 வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் சாலையோரமாக இயற்கை உபாதை கழிக்க சென்ற 18 வயதே ஆன, இளம்பெண்ணை, அசாம் மாநிலத்தை சேர்ந்த 'இக்ரம்' என்பவர் பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின் அவரை போக்சோவில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
