நகை வாங்குவது போல கடைக்குள் நுழைந்து 17 சவரன் கொள்ளை

புடவைக்குள் நகையை ஒளித்து கொள்ளை அடித்த 'பலே பெண்கள்'
நகை வாங்குவது போல கடைக்குள் நுழைந்து 17 சவரன் கொள்ளை
Published on

சென்னை திருவல்லிக்கேணியில் நகைக்கடை நடத்தி வரும் அஷ்ரஃப் அலி என்பவர், கடந்த 15ம் தேதி தனது தந்தை முகமது கனியிடம், கடையை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

மறுநாள் காலையில், அஷ்ரஃப் அலி, வழக்கம் போல் கடைக்கு வந்து நகைகளை சரி பார்க்கும் போது, 11 மோதிரம் ,4 கம்மல், இரண்டு செயின் உட்பட 17 சவரன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து, தனது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை அஷ்ரஃப் அலி ஆய்வு செய்துள்ளார். அப்போது, 15ஆம் தேதி பிற்பகலில், தனது தந்தை கடையில் இருந்தபோது, ந்கை வாங்குவது போல கடைக்குள் நுழைந்த மூன்று பெண்கள், நகைகளை பார்ப்பது போல நடித்து, அவற்றை எடுத்து தங்களது புடவைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. நகையை கொள்ளையடித்துச் சென்ற மூன்று பெண்களையும், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com