16 கிமீ நடைபயணம் - மலை கிராமத்தில் மக்களை சந்தித்து அமைச்சர் சொன்ன வார்த்தை
ஓசூர் அருகே ஆளஹள்ளி மலை கிராமத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக தர்மபுரி மாவட்டம்,ஏரி பஞ்சப்பள்ளி பகுதி மலை கிராமத்தில் சுமார்16 கிலோ மீட்டர் நடைபயணம் செய்து அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஆலப்பட்டி கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கினார். மேலும் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வையும் அமைச்சர் ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
