12ம் வகுப்பு மாணவர்களுக்கு - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

12ம் வகுப்பு மாணவ ர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வரும் 25ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சிகள், மார்ச் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை, கல்வி மாவட்ட அளவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் வழங்கப்படும் எனவும், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வந்து செல்வதற்கான பேருந்து கட்டணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும், பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com