10Th Student | போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

போக்சோவில் சிக்கியவர் யார் என தெரிந்ததும் போலீசுக்கு பயங்கர ஷாக்

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் கணவர் கைது சென்னை தேனாம்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் பூபாலன், பத்தாம் வகுப்பு மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், அவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதன்பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். அவரது மனைவி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com