Tiruvallur | Onion | லாரியிலேயே அழுகிய 100 டன் வெங்காயம் - லாரி ஓட்டுநர்களின் அவலநிலை
#Tiruvallur #Onion #Lorry #TNGovt #ThanthiTV
Tiruvallur | Onion Lorry | லாரியிலேயே அழுகிய 100 டன் வெங்காயம் - சோறும் நீரும் இன்றி தவிக்கும் லாரி ஓட்டுநர்களின் அவலநிலை செங்குன்றம் அருகே கூட்டுறவு அங்காடிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட 100 டன் வெங்காயம் லாரிகளிலேயே அழுகி, புழுக்கள் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தை கூட்டுறவு அங்காடிகளுக்கு கொண்டு செல்லாமல் தனியாருக்கு விற்பனை செய்யுமாறு கூறியதால், லாரி ஓட்டுநர்கள் சந்தைக்கு கொண்டு சென்று உள்ளனர். சந்தையில் வெங்காயம் தரமானதாக இல்லை என திருப்பி அனுப்பியதால், லாரியில் இருந்த சரக்குகளை அப்படியே வைத்திருக்குமாறு வெங்காயத்தை விநியோகம் செய்வதற்காக இருந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக உணவும் குடிநீருமின்றி லாரி ஓட்டுநர்கள் சாலையோரத்திலேயே தவித்து வருகின்றனர். துர்நாற்றம் வீசி லாரியில் படுக்க முடியாத சூழல் நிலவுவதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அழுகிய வெங்காயத்தைக் கொட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
