... `பூந்தமல்லி டூ போரூர்'… ஓட்டுநர் இல்லா மெட்ரோ சோதனை வெற்றி...
பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி முதல் போரூர் வரை இந்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில், பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மெட்ரோ மேலாண் நிர்வாக இயக்குனர் சித்திக்,, 2ம் கட்ட சோதனை ஓட்டம் சவாலாக இருந்ததாகக் கூறினார்.
Next Story
