உலகக் கோப்பை கால்பந்து - நாளை முதல் அரையிறுதி

பலம் வாய்ந்த பிரான்ஸை எதிர்கொள்ளும் பெல்ஜியம்
உலகக் கோப்பை கால்பந்து - நாளை முதல் அரையிறுதி
Published on
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த முதல் அரையிறுதி போட்டியில், நடப்பு கால்பந்து தொடரில் தோல்வியையே சந்திக்காத பிரான்ஸ் அணியும், பெல்ஜியம் அணியும் மோதுகின்றன. இதனால், மாஸ்கோவில் பெல்ஜியம் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பெல்ஜியம் வீரர் தாமஸ் வெரமலன் (THOMAS VERMALIN) , பிரான்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தாலும், அவர்களுக்கு கடும் சவால் அளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com