நெதர்லாந்தை பந்தாடிய பாகிஸ்தான்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் ஷகில் தலா 68 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து ஆல்ரவுன்டர் பேஸ் டீ லீட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 287 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு நெதர்லாந்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி கண்டது. நெதர்லாந்து ஆல்ரவுன்டர் பேஸ் டீ லீட் மட்டும் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Next Story

மேலும் செய்திகள்