IPL 2026 | இதுவரை நடந்த போட்டியிலே இதான் நம்பர் 1 த்ரில்

இதுவரை நடந்த போட்டியிலே இதான் நம்பர் 1 த்ரில்

இதுவரை நடந்த போட்டியிலே இதான் நம்பர் 1 த்ரில்.. மிரளவிட்ட GT, DC போட்டி

டெல்லியை வீழ்த்திய குஜராத்.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி... ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், டெல்லி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் கில் 70 ரன்கள் குவித்த நிலையில், ஜாஸ் பட்லர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி வெற்றியை நோக்கி முன்னேறியது. கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில், உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பிரஷித் கிருஷ்ணாவின் அற்புதமான பந்துவீச்சால், குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com